ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்..
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை தடைசெய்வதற்கான காலக்கெடுவையொட்டி, உணவகங்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றை மாற்றத் தயாராகி வருகிறார்கள்.
ஜூலை 1 முதல் இந்தியா ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கும் என்று அரசாங்கம் புதன்கிழமை கூறியது.
தடை செய்யப்பட உள்ள பொருட்களில் பிளாஸ்டிக் கொண்ட இயர்பட்கள், பிளாஸ்டிக் கொடிகள், சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் குச்சிகள், பிளாஸ்டிக் தட்டுகள், சிகரெட் பாக்கெட்டுகள் உள்பட பல பொருட்கள் உள்ளன.
டாபர் இந்தியா ஒருங்கிணைந்த காகித ஸ்ட்ராக்களுடன் ரியல் ஜூஸ் பேக்குகளை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. Fizz, உள்ளிட்ட பல நிறுவனங்கள் பேப்பர் ஸ்ட்ராக்களை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
அமுல் பிராண்டட் தயாரிப்புகளை விற்கும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட், நிறுவனம் மாற்றத்திற்கு “தயாராக” உள்ளது என்று தெரிவித்திருக்கிறது, அமுல் சிறிய டெட்ரா பேக்குகளான மோர் மற்றும் மில்க் ஷேக்குகளில் இருந்து குறிப்பிடத்தக்க விற்பனையைப் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.