ரூ.6,000 கோடி பங்கு வெளியீடு.. SEBIயின் அனுமதிக்கு காத்திருக்கும் Ebix CASH..!!
Ebix CASH நிறுவனம் ரூ.6 ஆயிரம் கோடி பொதுப் பங்குகளை வெளியிட அனுமதி கோரி பங்கு பரிவர்த்தனை ஆணையத்திடம் விண்ணப்பம் செய்துள்ளது.
அமெரிக்காவின் பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்டிருக்கும் Ebix நிறுவனத்தின் இந்திய துணைநிறுவனம் Ebix CASH. இது ரூ.6,000 கோடி பொதுப்பங்குகளை வெளியிடுவதற்கு அனுமதி கேட்டு செபியிடம் விண்ணப்பித்துள்ளது.
புதிய பங்குகள் வெளியீட்டின் மூலம் 6 ஆயிரம் கோடி நிதியை திரட்டி கொள்வதற்காக அனுமதி கோரி செபியிடம் வரைவறிகை்கை தாக்கல் செய்துள்ளதாகவும், இதில், ஓஎஃப்எஸ் பங்கு விற்பனை இருக்காது என்றும் Ebix CASH தெரிவித்துள்ளது.
புதிய பங்குகள் மூலம் பெறப்படும் தொகை Ebix நிறுவனத்தின் துணை நிறுவனங்களான Ebix Travels. மற்றும் Ebix CASH World Money ஆகியவற்றின் மூலதன தேவைகளுக்காக பயன்படுத்தி கொள்ளப்படும் என்றும், பொதுப்பங்கு வெளியீட்டில், தகுதியுடைய பணியாளர்களுக்கும், பங்குகள் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் Ebix CASH கூறியுள்ளது.
புதிய பொதுப்பங்கு வெளியீடுகள் தொடர்பாக Ebix CASH நிறுவனத்துக்கு, மோதிலால் ஓஸ்வால் இண்வெஸ்ட்மெண்ட், இகியூரஸ் கேப்பிட்டல், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், எஸ்பிஐ கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் மற்றும் யெஸ் செக்யூரிட்டீஸ்(இந்தியா) உள்ளிட்ட நிறுவனங்கள் ஆலோசனைகளை வழங்க உள்ளன.