ஆன்லைனில் வாங்க ₹5,620 செலவிட்ட வாடிக்கையாளர்கள்
அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆன்லைனில் 10.7 மில்லியன் குடும்பங்கள் ஏப்ரல் 2020 மற்றும் மார்ச் 2022 க்கு இடையில் அதிக FMCG பொருட்களை வாங்கினர் என்று தெரிவிக்கிறது.
Kantar Worldpanel இன் தரவுகளின்படி, கணக்கெடுக்கப்பட்டவர்களில், 31% பேர் கடந்த ஆண்டில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ததாகக் கூறினர். இதில், 28% பேர் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை ஆன்லைனில் வாங்கியுள்ளனர் என்று தெரிவிக்கிறது.
மார்ச் 2022 இல் முடிவடைந்த 24 மாதங்களில், FMCG பொருட்களை ஆன்லைனில் வாங்க, வாடிக்கையாளர்கள் சராசரியாக ₹5,620 செலவிட்டுள்ளனர் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2022 வரை எஃப்எம்சிஜி பொருட்களை ஆன்லைனில் ஷாப்பிங் செய்த மொத்த குடும்பங்களில் 13% மட்டுமே ஈ-காமர்ஸ் வாங்குபவர்கள் என்றாலும், அத்தகைய பொருட்களுக்கான செலவினங்களில் 59% பங்களித்தனர் என்று காந்தார் வேர்ல்டுபேனல் தரவு காட்டுகிறது.