எப்படியாவது ஜெயிச்சிடுடா மாறா என்றாலும் ஜெயிக்க முடியாதாம்…!!!
சூரரைப் போற்று படத்தில் வருவதைப்போல விமானப்பயணிகள் ஒன்றும் கூட்டம் கூட்டமாகலாம் வரமாட்டார்கள் என்பது போல ஏமாற்றமான செய்திதான் இது. CAPA என்ற அமைப்பு, விமான போக்குவரத்து தொடர்பாக புள்ளி விவரங்களை வெளியிட்டு பிரபலமடைந்ததாகும். இந்த நிறுவனம் அடுத்தாண்டு அதாவது 2024ம் ஆண்டு விமான போக்குவரத்துத்துறை எப்படி இருக்கும் என்று ஆருடம் தெரிவித்துள்ளது. அதில் அடுத்த நிதியாண்டு,அதாவது 2024 நிதியாண்டில் இந்தியாவில் விமானங்களை இயக்கி வரும் நிறுவனங்களுக்கு 1.1 முதல் 1.2பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு நேரிட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அடுத்த நிதியாண்டில் புதிதாக 132 விமானங்கள் புதிதாக இந்தியாவில் களமிறங்க வாய்ப்புள்ளதாகவும்,இந்தியாவில் விமானங்களை இயக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 816 ஆக உயரும் என்றும் காபா கணித்துள்ளது. பல்வேறு பிரச்னைகளால் 100 விமான நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் சேவைகளை வழங்கமுடியாமல் தவித்து வருவதாக கூறியுள்ளது. அதிகரித்து வரும் விமான எரிபொருள் விலையேற்றமும் முக்கிய பிரச்சனையாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எத்தனை முயற்சி செய்தாலும் சூரரைப்போற்று படம் போல ஆனந்தக் கண்ணீரெல்லாம் யாரும் விடமுடியாது என்பதே நிதர்சனம்.