குறைந்து வரும் மின்சார இருசக்கர வாகனங்களின் பதிவு- VAHAN பதிவு
VAHAN போர்ட்டலில் வாகனப் பதிவு தரவுகளின்படி, மின்சார இருசக்கர வாகனங்களின் பதிவு ஏப்ரல் மாதத்தில் இருந்து 20% குறைந்து மே மாதத்தில் 39,339 ஆகக் குறைந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வரை மின்சார இரு சக்கர வாகன விற்பனையில் முன்னணியில் இருந்த ஹீரோ எலக்ட்ரிக், மே மாதத்தில் 2,849 பதிவுகளுடன் ஐந்தாவது இடத்திற்குச் சரிந்தது.
எலாரா கேபிட்டல் தொகுத்த VAHAN தரவுகளின்படி ஏதர் எனர்ஜி, பஜாஜ் ஆட்டோ மற்றும் ரிவோல்ட் மோட்டார் தவிர, முன்னணி OEMகள் பதிவுகளில் மே மாதம் சரிவைக் காட்டின.
மின்சார இரு சக்கர வாகன சந்தையில் முதல் இரண்டு நிறுவனங்களில் ஒன்றான ஓலா எலக்ட்ரிக், பதிவு 28% குறைந்துள்ளது. டிவிஎஸ் மோட்டார் பதிவுகள் 69%, ஹீரோ எலக்ட்ரிக் 57%, ஒகினாவா 16% மற்றும் ஆம்பியர் 11% எனகுறைந்துள்ளது.
மே மாதத்தில் மின்சார வாகனப் பதிவு 3.2% ஆக இருந்தது, இது ஏப்ரல் மாதத்தில் 4.1% ஆக இருந்தது.
இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப், கடந்த வாரம் தனது முதல் மின்சார இரு சக்கர வாகனத்தை வெளியிடும் திட்டத்தை சில மாதங்களுக்கு ஒத்திவைப்பதாகவும், பண்டிகைக் காலத்தில் சந்தைக்கு வரும் என்றும் அறிவித்தது.
சப்ளை செயின் சீர்குலைவுகள், EV பேட்டரிகள் மீதான பாதுகாப்பு கவலைகள் மற்றும் ஏற்கனவே உள்ள தயாரிப்புகளின் தரம் போன்ற பல காரணிகள் உற்பத்தியாளர்களை தங்கள் தயாரிப்புகளின் தரத்தை மறுமதிப்பீடு செய்ய நிர்பந்தித்ததாக சில வல்லுநர்கள் தெரிவித்தனர்.
தவிர, EV பேட்டரி மற்றும் பாதுகாப்பு தரநிலைகள் விரைவில் வெளியிடப்படும் என்பதால், இ-ஸ்கூட்டர் நிறுவனங்களும் எச்சரிக்கையாக உள்ளன.