மின்சார வாகன விலை குறையுமாம்…!!!
கடந்த வியாழக்கிழமை டெல்லியில் தனியார் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலத்துறை அமைச்சர் நிதின்கட்கரி பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.அப்போது பேசிய கட்கரி ஜம்மு காஷ்மீரில் கண்டெடுக்கப்பட்டுள்ள லித்தியத்தால் இந்தியாவில் மின்சார வாகன விலை குறையும் என்றும், பேட்டரி உற்பத்தியில் லித்தியமின் பங்கு மிகமுக்கியம் என்றும் தெரிவித்தார். Reasi மாவட்டத்தில் மட்டும் 5.9மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு லித்தியம் கொட்டிக்கிடப்பதாகவும் அவர் தெரிவித்தார். லித்தியம் பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் சந்தைக்கு வந்தால் காற்று மாசு குறைவதோடு,எண்ணெய் இறக்குமதி செலவும் குறையும் என்றார். தற்போது 1,200 டன் லித்தியம் ஆண்டுதோறும் இறக்குமதி செய்யப்பட்டு வருவதாகவும், ஜம்மு காஷ்மீர் லித்தியம் சந்தைக்கு வந்தால் வெளிநாட்டு லித்தியத்துக்கு தேவை இருக்காது என்று கூறப்படுகிறது. இந்தியாவிலேயே லித்தியம் கிடைக்கும் என்பதால் உலகிலேயே மிகப்பெரிய உற்பத்தி கேந்திரமாக இந்தியா மாறும் என்று தெரிவித்துள்ளார்.மின்சார பேட்டரிகளால்தான் மின்சார வாகன விலைகள் அதிகமாக இருப்பதாக கூறும் கட்கரி, விரைவில் லித்தியத்தை வெட்டி எடுத்து பேட்டரிகளுக்கு தகுந்தபடி மாற்றும் பணிகள் நடக்கும் என்றார். இந்த லித்தியம் இந்தியாவில் எடுக்கப்பட்டால் செல்போன்கள், லேப்டாப்களில் லித்தியம் பயன்பாடும் வெளிநாட்டை நம்பியிருக்கத் தேவை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.