எலான் என்ன செய்தாரு தெரியுமா.. Twitter பங்க வாங்கிருக்காரு..!!
சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை எலான் மாஸ்க் வாங்கியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் தலைவராகவும், முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் எலான் மஸ்க் இருக்கிறார்.
இவர், கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைத்தளமான டுவிட்டரில், ஜனநாயகம் செயலாற்ற தேவையான பேச்சு சுதந்திரத்தை டுவிட்டர் கடைப்பிடிக்கிறது என்று நினைக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி, கருத்துக் கணிப்பு நடத்தியிருந்தார். இதற்கு 70 சதவீதம் பேர் இல்லை என்று பதில் அளித்திருந்தனர்.
இதையடுத்து, புதிய சமூக வலைதளத்தை எலான் மஸ்க் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியானதற்கு, அதுகுறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக மஸ்க் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது, டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். 2.89 பில்லியன் டாலர் முதலீட்டில், டுவிட்டரின் 73.5 பில்லியன் பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். தனது சொந்த பணத்தை முதலீடு செய்து டுவிட்டரின் பங்குகளை வாங்கியிருப்பதாக செபியிடம் மஸ்க் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டுவிட்டர் நிறுவனத்தின் மிகப்பெரிய தனிநபர் முதலீட்டாளராக எலான் மஸ்க் இருக்கிறார். எலான் மஸ்க் வைத்துள்ள 73,486,938 பொதுப்பங்குகள், டுவிட்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் டோர்சிவைத்துள்ள பங்குகளை விட 4 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
டுவிட்டரின் பங்குகளை எலான் மஸ்க் வாங்கிய செய்தி வெளியான நிலையில், டுவிட்டரின் பங்குச் சந்தை மதிப்பு 25.8 சதவீதம் அளவுக்கு உயர்ந்து 49.48 டாலராக உயர்ந்துள்ளது.