ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் பட்டியல்: மஸ்க் முதலிடம், இரண்டாவது இடத்தில் யார்?
செவ்வாயன்று டெஸ்லா பங்கு விலையில் 7 சதவீத சரிந்த பின், எலோன் மஸ்க் $200 பில்லியன் கிளப்பில் இருந்து வெளியேறினார்.
செவ்வாயன்று, எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பில் 5.40 சதவீதம் சரிந்து $192.7 பில்லியன் டாலராக இருந்தது, ஆகஸ்ட் 26, 2021 முதல் அதன் மிகக் குறைந்த அளவை எட்டியது. இருப்பினும், ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் பட்டியலில் மஸ்க் இன்னும் முதலிடத்தில் இருக்கிறார். Amazon.com Inc இன் ஜெஃப் பெசோஸ் $127.80 பில்லியன் சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
கடந்த முறை, எலோன் மஸ்க் நிகர மதிப்பு $200 பில்லியனுக்குக் கீழே சரிந்தபோது,மார்ச் 2022க்கு பின்னர் தனது இழப்புகளைச் சரிசெய்தார். இந்த மீள் எழுச்சி எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பை 4 ஏப்ரல் 2022 அன்று $288 பில்லியனாக உயர்த்தியது,
அன்று மஸ்க் ட்விட்டரில் 9 சதவீத பங்குகளை வாங்கியதாக அறிவித்தார். ஆனால் ட்விட்டர் கையகப்படுத்தல் குறித்த சந்தேகங்கள் இரு நிறுவனங்களின் பங்குகளையும் சரிவுக்கு கொண்டு சென்றது.
2022 மே மாதத்தில் எலோன் மஸ்க், போட்களால் கட்டுப்படுத்தப்படும் பிளாட்ஃபார்மில் உள்ள கணக்குகளின் எண்ணிக்கை குறித்த பொது ஆதாரத்தை ட்விட்டர் வழங்கும் வரை ட்விட்டர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று கூறினார்