ஐ லவ் யூ சொன்னார் எலான் மஸ்க்…
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆஸ்டின் பகுதியில்,டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், ஒரு கூட்டம் நடத்தினார். அப்போது டெஸ்லா பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு 56 பில்லி்யன் அமெரிக்க டாலர்கள் அளிக்க இசைவு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பணம் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது. அப்போது பேசிய மஸ்க், மிகச்சிறப்பான் பங்குதாரர்களை தாம் கொண்டுள்ளதாகவும், ஐ லவ் யு என்றும் கூறினார். இது தொடர்பாக ஏற்கனவே நடந்த வழக்குகளிலும் தனிப்பட்ட பங்குதாரர்களுக்கு மட்டும் பணம் தருவது கூடாது என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. வழக்கமான தங்கள் எக்ஸ் வலைதளத்திலும் தங்கள் பதிவுகளில் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.90 விழுக்காடு முதலீட்டாளர்கள் மஸ்குக்கு ஆதரவாகவே வாக்குகளையும் அளித்துள்ளனர். இது தொடர்பாக டெலாவரில் வழக்குளும் நடைபெற்று வருகின்றன. 56 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளிக்கும் திட்டத்தில் அப்படி என்னதான் பிரச்சனை?
எலான் மஸ்கை பொருத்தவரை ஒவ்வொரு மைல்கல்லை எட்டும்போதும் சில தொகையை அளிக்க மஸ்க் திட்டமிட்டு இருந்தார். 30 கோடி பங்குகளை 2018-ல் 12 விழுக்காடு அளவுக்கு கணக்கு வைத்து தலா 1 விழுக்காடு அளவுக்கு 28 இலக்குகளை நோக்கி குறிப்பிட்ட பங்குகள் மீது மஸ்க் முதலீடுகளை செய்து வருகிறார். 2020ஆம் ஆண்டே டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மூலதனம் 650 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரு பங்குக்கு 200 டாலர் வரை உயர்ந்திருக்கிறது. மஸ்கின் 2018 பணம் தரும் திட்டம் யாதெனில் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உள்ள நிறுவனத்தை 650 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிறுவனமாக மாற்றுவதாகவே இருந்தது. அதன்படியே தற்போது 56 பில்லியன் டாலர்களை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மஸ்க் தருவதில் தவறில்லை என்றும் எலான் மஸ்க் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.