அலுவலக அறைகளை பெட்ரூமாக்கிய எலான் மஸ்க்!!!
பல லட்சம் கோடி ரூபாய்க்கு டிவிட்டரை வாங்கிய எலான் மஸ்க் அதில் எஞ்சியுள்ள பணியாளர்களையும் கடுமையாக வேலை செய்யும்படி கசக்கி புழிந்து வருகிறார். இந்த சூழலில் பணியாளர்கள் அலுவலகத்தில் நீண்ட நேரம் தங்கியிருப்பதால் அவர்கள் தூங்குவதற்கு சிறிய படுக்கை அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பணியாளர்கள் கஷ்டப்படுவதை உணர்ந்து திடீரென இந்த ஏற்பாடுகளை மஸ்க் செய்துள்ளதாக கூறப்படுகிறது,ஒரு மாடியில் 8 படுக்கை அறைகள் இதுபோல தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்லா நிறுவன கார்களை உருவாக்கும்போது மஸ்க் அலுவலகத்திலேயே வாரத்தில் 120 மணி நேரம் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் மஸ்க் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், படுத்து தூங்க வீடுகளுக்கு செல்வது கூட பிடிக்காத மஸ்க் இவ்வாறு செய்துள்ளதாக இதற்கும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
சூப்பர் ஆப் செயலியாக டிவிட்டர் 2.0 இருக்க வேண்டும் என்று எலான் மஸ்க் திட்டமிட்டுள்ள நிலையில் தனது பணியாளர்களை வீட்டுக்கே அனுப்பாமல் பல வாரங்களாக பணியாற்றும்படி மஸ்க் பாடாய் படுத்தி வருகிறார்.