Twitter நிர்வாக குழுவில் No எலான்.. Twitter சந்தை மதிப்பு குறையுமா..!?
Twitterநிர்வாகக் குழுவில் எலான் மஸ்க் இடம்பெறவில்லை என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் தலைவராகவும், முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் எலான் மஸ்க் இருக்கிறார்.
இந்நிலையில், தற்போது, டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். 2.89 பில்லியன் டாலர் முதலீட்டில், டுவிட்டரின் 73.5 பில்லியன் பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். தனது சொந்த பணத்தை முதலீடு செய்து டுவிட்டரின் பங்குகளை வாங்கியிருப்பதாக செபியிடம் மஸ்க் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் டுவிட்டர் நிறுவனத்தின் மிகப்பெரிய தனிநபர் முதலீட்டாளராக எலான் மஸ்க் இருக்கிறார். எலான் மஸ்க் வைத்துள்ள 7 கோடியே 34 லட்சம் டுவிட்டர் பங்குகள், அந்நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் டோர்சி வைத்துள்ள பங்குகளை விட 4 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
டுவிட்டரின் பங்குகளை எலான் மஸ்க் வாங்கிய செய்தி வெளியான நிலையில், கடந்த வாரம் டுவிட்டரின் பங்குச் சந்தை மதிப்பு 25.8 சதவீதம் அளவுக்கு உயர்ந்து 49.48 டாலராக அதிகரித்திருந்தது.
இதனிடையே, எலான் மஸ்க் டுவிட்டர் நிர்வாகக் குழுவில் இடம்பெறுவார் என்று தகவல்கள் வெளியாகின. டுவிட்டரின் தீவிர ரசிகரும், விமர்சகருமான எலான், எங்கள் பங்குகளை வாங்கியது எங்களுக்கு மகிழ்ச்சி. அவரது விமர்சனங்கள் எங்கள் நிறுவனத்தை வலிமையாக்கும். அவரை எங்கள் நிர்வாகக் குழுவுக்கு வரவேற்கிறோம் என்று அதன் தலைமை செயல் அதிகாரி பாரக் அகர்வால் கூறியிருந்தார்.
ஆனால், தற்போது எலான் டுவிட்டர் நிர்வாகக் குழுவில் இணையவில்லை என்று டுவிட்டர்தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் தெரிவித்துள்ளார். எங்கள் பங்குதாரர்கள் நிர்வாகக் குழுவில் இருந்தாலும், இல்லா விட்டாலும் அவர்களு்டைய உள்ளீட்டை நாங்கள் எப்போதும் மதிப்போம் . எலான் எங்களின் மிகப்பெரிய பங்குதாரர் மற்றம் அவரது உள்ளீட்டிற்கு எப்போதும் செவி சாய்ப்போம் என பாரக் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டர் நிர்வாகக் குழுவில் எலான் மஸ்க் இணையவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பங்குச்சந்தையில் டுவிட்டரின் பங்கு மதிப்பு குறையுமா என சந்தேகம் எழுந்துள்ளது.