ஈஎம்ஐ, லோன்களின் வட்டி உயர்கிறது.!
மத்திய ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை 0.25% உயர்த்துவதாக அதன் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.இதனால் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.50%ஆக உயர்கிறது
இதன் விளைவாக, வீடு, ஆட்டோ, மற்றும் தனிநபர் கடன்கள் வட்டி விகிதம் உயரப்போகிறது எளிமையாக சொல்ல வேண்டுமானால் 10 ஆயிரம் ரூபாய் ஈஎம்ஐஆக செலுத்தியிருந்த நபர் தற்போது அதைவிட அதிகமாக பணத்தை மாத தவணையாக செலுத்தவேண்டுயுள்ளது நிதி கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் விளக்கினார்.நடப்பாண்டின் முதல் நிதி கொள்கைக்கூட்டம் இதுவாகும். விலைவாசியை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில்கொரோனாவுக்கு பிறகு ரெபோ வட்டி விகிதம் 2.5%உயர்ந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி வரும் நிதியாண்டில் 7%ஆக இருக்கும் என்று கூறியுள்ள ஆளுநர் சக்திகாந்ததாஸ்,டிசம்பரில் பணவீக்கம் 5.72%ஆக உள்ளது ரெபோ வட்டி விகிதம் உயர்ந்துள்ளதால் தற்போது வீடு வாங்குவோர் கூடுதல் பணம் செலுத்த வேண்டியுள்ளதால் அதனை பலரும் தற்போது தவிர்த்து வருகின்றனர்