EPFO ஈக்விட்டிகளில் 20 சதவீதம் முதலீடு
வருங்கால வைப்புநிதியான EPFO, ஈக்விட்டிகளில் தனது முதலீடுகளை 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை உயர்த்துவதற்கான திட்டத்திற்கு இந்த மாதம் ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. மக்களவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் திங்கள்கிழமை இதனை தெரிவித்தார்.
அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ” CBT, EPF ஆகியவற்றின் துணைக் குழுவான FIAC, IV வகையின் பங்கு மற்றும் தொடர்புடைய முதலீடுகளில் முதலீடுகளை அதிகரிக்க பரிந்துரைத்துள்ளது. CBT, EPF முதலீட்டு முறை 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
2021-22 ஆம் ஆண்டில், சந்தாதாரர்கள் ரூ. 1,04,959.18 கோடி திரும்பப் பெறுவதற்கான 2,88,15,498 கோரிக்கைகளை EPFO தீர்த்து வைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
எதிர்வரும் ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள EPFO அறங்காவலர் கூட்டத்தின் போது இந்த திட்டம் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.