“அடுத்த 6 மாதம் ஈக்விட்டி சந்தை உயரும்..”
இந்தியாவில் பொதுத்தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு பங்குச்சந்தைகள் மீண்டும் ஒருமுறை உயர்வை சந்திக்கும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். 1980 முதல் 2019 வரை நடந்த தேர்தல்களின்போது 11 முறை பெரிய உயர்வை இந்திய சந்தைகள் சந்தித்து இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் என்றும், அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என்றும், கடன் வழங்கும் அளவு அதிகரிக்கும் என்றும் அவர்கள் ஆரூடம் கூறுகின்றனர். பாஜக ஆட்சிக்கு மீண்டும் வந்தாலும், காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலும் பங்குச்சந்தையில் பெரிய மாற்றம் இருக்கும் என்று கூறும் அவர்கள், உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி முயற்சித்து வருகிறது. உள்ளூர் சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் சிப் எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வஸ்ட்மென்ட் பிளான் மூலம் மாதா மாதம் 16,900 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்து வருகின்றனர். 1998ஆம் ஆண்டு தேர்தலில் மட்டுமே மும்பை பங்குச்சந்தை பாதகமான முடிவு கிடைத்ததாகவும், 2009 தேர்தலில் 60 %வருவாய் 6 மாத காலத்தில் ரிட்டர்ன்ஸ் கிடைத்திருக்கிறது. அமெரிக்க கடன் பத்திரங்கள் மதிப்பு எந்த நேரமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி ரிசர்வ் வங்கி கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்கவும் வாய்ப்பு உள்ளது.