பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு 15%
இந்தியாவில் முதல் முறையாக பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் விகிதம் 15 விழுக்காடாக மே மாதம் உயர்ந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உயிரி எரிபொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் எத்தனாலை அதிகளவில் மே மாதம் வாங்கியுள்ளன. அதாவது பெட்ரோலுடன் 67 கோடி லிட்டர் எத்தனாலை நிறுவனங்கள் கலந்துள்ளன. கடந்த ஏப்ரலில் 12.7 விழுக்காடு மட்டுமே எண்ணெயுடன் எத்தனால் கலக்கப்பட்டதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 2023 நவம்பர் முதல் எத்தனால் கலப்பு நடைமுறையில் உள்ளது. 2022-23 காலகட்டத்தில் எத்தனால் விநியோகம் 12.1 விழுக்காடாகவும் 2020-21 காலகட்டத்தில் 8.1விழுக்காடாகவும் இருந்தது.10 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 1.5 விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அடுத்தாண்டுக்குள் 20 விழுக்காடு எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து முடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எத்தனால் காய்ச்சும் நிறுவனங்களுக்கு இதனால் உடனடியாக வருமானம் கிடைத்து வருகிறது. கச்சா எண்ணெயை சேமிக்கும் நிறுவனங்கள், எத்தனாலை சேமிக்கும் வசதி இல்லை என்றும் கூறப்படுவதால் எண்ணெய் கலப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வாகனங்கள் 10 விழுக்காடு எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தி வருவதால் எந்த பிரச்சனையும் இல்லை. இதுவே 20 விழுக்காடு எத்தனால் கலந்தால் வாகனங்களில் சிறு சிறு சாதனங்களை கூடுதலாக சேர்க்க நேரிடலாம். எத்தனால் விலையும் குறைவு என்பதாலும், 6-7 விழுக்காடு எரிபொருளை மிச்சம் பிடிக்க இயலும்.