ஏதெர் வண்டி விலை எகிற போகுது…
மின்சார இருசக்கரவாகனங்களில் தங்களுக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்தது ஏத்தர் நிறுவனம் என்றால் அது மிகையல்ல. இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு விளம்பரப்படுத்தியுள்ளது. அதில் வரும் 31ம் தேதிக்குள் தற்போதுள்ள ஏதெர் 450எக்ஸ் ரக வாகனங்கள் அடுத்த மாதத்தைவிட 32 ஆயிரத்து 500 ரூபாய் குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்புக்கு மத்திய அரசு வழங்கும் உற்பத்தி மானியம் குறைவே காரணம் என்று மின்சார பைக் தயாரிக்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. புதிதாக ஒரு நபர் மின்சார பைக் வாங்க விரும்பினால் கடந்த 2019ஆம் ஆண்டு மானியம் 30ஆயிரம் ரூபாயும், 2021-ல் இதற்கான மாநியம் 60ஆயிரம் ரூபாயாகவும் இருந்தது. இந்த மானியம் நடப்பாண்டு 22ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின்சார வாகன உற்பத்தி ஊக்குவிக்கும் அமைப்பான ஃபேம், தற்போது புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.அதன்படி ஜூன் 1ஆம் தேதி முதல் உற்பத்தி கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. மேலும் நிறுவனங்களுக்கு வழங்கி வந்த மானியம் குறைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மானியம் குறையும் பட்சத்தில் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்று பார்க்கும் நோக்கில்தான் இந்த மானியம் குறைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. திடீரென மின்சார பைக் மானியம் கட்டுப்படுத்தப்பட்டால் அது வாடிக்கையாளர்களிடம் நிச்சயம் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று 24 வாகன உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனையும் மீறி வரும் 1ஆம் தேதி மானியம் குறைய இருப்பதால் தற்போதைய விலையை விட குறிப்பிடத்தகுந்த அளவுக்கு விலை அதிகரிக்கும் என்றும் ஏதெர் உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.