30 நாட்களில் ஆவணங்கள கொடுத்தாகனும்..ஆமா..!!!
வங்கிகள், நிதிநிறுவனங்கள்,கூட்டுறவு அமைப்புகள், தனியார் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடந்த புதன்கிழமை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது அதில், கடனை ஒருவர் கட்டி முடித்ததில் இருந்து 30 நாட்களில் சொத்து ஆவணங்களை உரியவரிடம் தந்துவிட வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. கடனை கட்டி முடித்த 30 நாட்களுக்கு பிறகு தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வரும் டிசம்பர் 1 ஆம்தேதி வழங்கப்பட வேண்டிய அனைத்து சொத்து ஆவணங்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்விக்கடன்,வீட்டுக்கடன்களுக்கும் இது பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை குறிப்பிட்ட கடன்களை கட்டி முடித்த பின்பும் குறிப்பிட்ட வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆவணங்களை தரத் தவறினாலோ, ஆவணங்களை தொலைத்துவிட்டாலோ, அதன் டூப்ளிகேட் நகல்களை பெற வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆவணங்கள் தொலைந்தால் மேலும் கூடுதலாக 30 நாட்கள் அவகாசம் தரப்படும், அதற்குள் நகல் சான்றுகளை வங்கிகளோ,கடன் வழங்கிய நிறுவனம் தரவேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. ஒரு வேளை கடன் வாங்கிய நபர் உயிரிழந்துவிட்டு இருந்தால் அவரின் அதிகாரபூர்வ வாரிசுகளிடம் இந்த ஆவணங்களை அளிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.