உச்சம் தொட்டாலும் ஒன்னும் ஃபீல் ஆகலயே…
இந்திய பங்குச்சந்தைகள் ஜூன் 16ஆம் தேதி இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டது.இது பற்றி ஜிரோதா நிறுவனத்தின் நிறுவனர் ,அறிவிப்பு வெளியிட்டார்.இந்த அளவு என்பது சில்லறை பங்குகளில் பெரிய பாதிப்பு இல்லை என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். மும்பை பங்குச்சந்தை மட்டுமே உச்சம் தொட்டுள்ளதாகவும்,தேசிய பங்குச்சந்தைகள் பெரிய பாதிப்பை கண்டுள்ளதாகவும் காமத் தெரிவித்துள்ளார். வங்கிகளில் FD மட்டுமே முக்கியம் என்றும் சக போட்டியாளர்களுடன் ஒப்பிட கூடாது என்றும் நிதின் காமத் தெரிவித்துள்ளார். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 63,384 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. கடந்த 2022 டிசம்பர் 1ஆம் தேதிக்கு பிறகு ஜூன் 16ஆம் தேதி பிடித்த உச்சம்தான் இதுவரையில் அதிகமாகும்.