எக்ஸ்ரே எடுக்க கூட இனி வலிக்கும் போல.!!!
மத்திய அரசுக்கு நிதி ஆதாரங்கள் என்பது ஆக்டோபஸ் கரங்களைப்போல பல வழிகள் உள்ளன. இதன் ஒரு பகுதியாக வரிவிதிப்பு இருக்கிறது,.இந்த நிலையில் வரும் 1-ம் தேதி முதல் Xray இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தாலும் அதற்கு 15 விழுக்காடு வரி செலுத்த வேண்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிதி மசோதா சட்டவடிவமாகும்பட்சத்தில் கிட்டத்தட்ட அனைத்து சுங்க வரிகளும் உயர உள்ளன. தற்போது வரை எக்ஸ்ரே இயந்திர இயக்குமதிக்கு 10விழுக்காடு இறக்குமதி வரி இருக்கிறது. இது வரும் 1ம் தேதி முதல் 5 விழுக்காடு உயர்கிறது. ஒரு பக்கம் இது சுமையாக கருதினாலும் இந்தியாவிலேயே இதற்கான ஜெனரேட்டர்களை உற்பத்தி செய்ய வைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கமும் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேட் இன் இந்தியா திட்டத்தில் இந்திய உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் தரவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.