Mutual Fund முதலீடுகள்.. முதலீட்டாளர்களுக்கு சிறப்பான லாபம்..!!
இந்திய பங்குச் சந்தை, அதன் முதலீட்டாளர்களுக்கு சிறப்பான லாபத்தை அளித்துள்ளது. இந்த பங்கு முதலீட்டு பட்டியலில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் அடங்கும்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில், மோதிலால் ஓஸ்வால் நிஃப்டி ஸ்மால்கேப் 250 இன்டெக்ஸ் ஃபண்ட் நேரடி வளர்ச்சித் திட்டம் , ஈக்விட்டி ஸ்மால்-கேப் இன்டெக்ஸ் ஃபண்ட் ஆகியவை முதலீட்டாளர்களின் பணத்தை இரட்டிப்பாக்கியுள்ளது.
மோதிலால் ஓஸ்வால் நிஃப்டி ஸ்மால்கேப் படி 250 இன்டெக்ஸ் ஃபண்ட் விலை ரூ.10 (6 செப்டம்பர் 2019) இலிருந்து இன்று ரூ.20.07-ஆக உயர்ந்துள்ளது. அதைப்போலவே மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி ஸ்மால் கேப் இன்டெக்ஸ் கடந்த ஓராண்டில், 105.75 சதவீத முழுமையான வருவாயை வழங்கியுள்ளது.
Invesco India Smallcap Fund Direct Growth மற்றும் Nippon India Nifty Smallcap 250 Index Fund Direct Growth ஆகியவை முதலீட்டாளர்களுக்கு சிறப்பான வருமானத்தை அள்ளித் தந்தது. நிப்பான் இந்தியா நிஃப்டி ஸ்மால்கேப் 250 இன்டெக்ஸ் ஃபண்ட் ஒரு வருடத்தில் 26.76 சதவீத வருவாயை வழங்கியுள்ளது, அதேசமயம் இன்வெஸ்கோ இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் நேரடி வளர்ச்சி கடந்த ஓராண்டில் 29.26 சதவீத வருவாயைக் கொடுத்துள்ளது.