இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி சரிவு!!!
சிறு சிறு மின்சாதன பொருட்களை தயாரிப்பதில் சீனாவின் பங்களிப்பு மிகமிக அதிகமாக உள்ளது. ஆனால் பொறியியல் துறை சார்ந்த உற்பத்திகளில் இந்தியா எப்போதும் முன்னணியில் உள்ளது. சீனாவில் நிலவி வரும் கொரோனா சூழல் காரணமாக இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொறியியல் துறை சார்ந்த பொருட்களின் அளவு 40விழுக்காடு சரிந்துள்ளது. கடந்தாண்டு 8.10பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த ஏற்றுமதி அளவு, நடப்பாண்டு நவம்பரில் 8.07 பில்லியன் டாலராக சரிந்துள்ளது.ஐரோப்பிய நாடுகளில் உயர்ந்து வரும் எரிபொருள் விலை மற்றும் உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்கள் அளவும் சரிந்துள்ளது. சீனாவில் நிலவும் கொரோனா பாதிப்பு சூழலால் வர்த்தகம் தடைபட்டிருந்தாலும், அமெரிக்காவுடனான பொறியியல் துறை ஏற்றுமதி உயர்ந்துள்ளது. இந்தியாவுக்கும்-அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் ஆண்டுக்கு ஆண்டு பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி 14% உயர்ந்துள்ளது.