பயனர்களை இழந்த மெட்டா – பட்டியலில் சறுக்கியதால் மார்க் வேதனை..!!
உலகில் முதலிடத்தில் உள்ள 10 நிறுவனங்களின் பட்டியலில் இருந்து மெட்டா நிறுவனம் சரிவை சந்தித்துள்ளது.
Meta-வான Face Book:
அனைவராலும் பயன்படுத்தப்படும் சமூகஊடகமான Face Book அண்மையில் Meta என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனுடைய நிறுவனம் மார்க் ஜுகர்பெர்க் உலகின் மிகப்பெரிய கோடிஸ்வரர்களின் ஒருவராக உள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாக மெட்டா என மாறியுள்ள Face Book பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
சரிவில் சமூக ஊடகம்:
2021-ம் ஆண்டின் 3-வது காலாண்டிலிருந்து 4-வது காலாண்டு வரையில், சுமார் ஒரு மில்லியன் பயனாளர்களை மெட்டா இழந்துள்ளது. இதனால் அதன் பங்கு விலையும் குறைந்துள்ளது. பிப்ரவரி 3-ம் தேதி, ஒரே நாளில் மெட்டா பங்கு விலை 26.4% சரிந்து, சந்தை மூலதனத்தில் 240 பில்லியன் டாலர்களை இழந்தது. அமெரிக்க நிறுவன வரலாற்றில் இது ஒரு நாள் மிகப்பெரிய இழப்பு என்று கூறப்படுகிறது.
மெட்டாவின் பங்கு விலை இன்றுவரை மேலும் 13 சதவீதம் இழந்துள்ளது. இது சந்தை மூலதனத்தின் அடிப்படையில் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலை வீழ்ச்சியடையச் செய்துள்ளது. ப்ளூம்பெர்க் தரவரிசை வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்குச்சந்தை மதிப்பின்படி Meta-வின் தாய் நிறுவனமான எம்கேப்பின் மதிப்பு 565 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. இதனால் உலகின் முதல் 10 நிறுவனங்கள் பட்டியலில் இருந்து Meta சரிவை சந்தித்து 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 1 டிரில்லியன் டாலரை கடந்து, உலகின் மதிப்பு மிக்க நிறுவனங்களின் பட்டியலில் 6-வது இடத்திலிருந்த Meta பெரும் சரிவுகளை சந்தித்து வருகிறது. இதனால் அதன் நிறுவனம் மார்க் ஜுகர்பெர்க் வேதனையடைந்துள்ளார்.