தகிக்கும் தங்கம் விலை.
இந்திய பங்குச்சந்தைகள் செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால் விடுமுறை விடப்பட்டுள்ளது. 20ஆம் தேதி தான் சந்தை மீண்டும் இயங்கும். சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை 5550ரூபாயாக உள்ளது. ஒரு சவரனின் விலை 44ஆயிரத்து 400ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து 78 ரூபாய் 30 காசுகளாக உள்ளது. கட்டிவெள்ளி விலை கிலோவுக்கு 300ரூபாய் உயர்ந்து 78 ஆயிரத்து 300 ரூபாயாக உள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் நிபுணர்கள், இந்த விலைகளுடன் கட்டாயம் 3 விழுக்காடு ஜிஎஸ்டி சேர்க்கப்படவேண்டும், இது மட்டுமின்றி செய்கூலி,சேதாரமும் சேர்க்கவேண்டும், செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறிக்கொண்டே இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், தங்கத்தின் விலை கடந்த 20 வருடங்களில் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் வரும் நாட்களிலும் இது ஏறுமுகமாகவே இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். எனவே முடிந்தவரை தங்கத்தில் முதலீடு செய்வது நல்ல பலன்தரும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அவசர நேரத்துக்கு தங்கம் சிறந்த முறையில் கைகொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க இயலாது.