அசத்திய இந்திய பங்குச்சந்தைகள்!!!
வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் நல்ல லாபத்தை பதிவு செய்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 507 புள்ளிகள் அதிகரித்து 63 ஆயிரத்து 8 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தன.தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 141 புள்ளிகள் உயர்ந்து 18,641புள்ளிகள் வர்த்தகம் முடிந்தது. Mahindra & Mahindra, HDFC, IndusInd Bank, Bajaj Finserv, HDFC Bank, Kotak Mahindra Bank, Bharti Airtel, Titan, UltraTech Cement ஆகிய நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் நல்ல லாபம் தந்தன. Power Grid மற்றும் HCL Technologies நிறுவனங்கள் சறுக்கின அமெரிக்காவில் வெளிநாட்டு பங்குகள் முதலீட்டுக்கு சாதகமான சூழல் வந்ததை அடுத்து அதன் எதிரொலியாக இந்திய சந்தைகளும் ஏற்றம் கண்டுள்ளன. ஆசியா,சீனா,டோக்கியோ பங்குச்சந்தைகளும் லாபத்தை பதிவு செய்தன.ஹாங்காங் பங்குச்சந்தை மட்டும் லேசான சரிவுடன் வர்த்தகம் செய்தது. அமெரிக்க பங்குச்சந்தைகள் உயரும்போதெல்லாம் உலகின் பெரும்பாலான நாட்டு பங்குகள் ஏற்றத்தை காண்பது வழக்கமான ஒன்று என்ற அடிப்படையில் இந்திய சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன. பங்குச்சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு லாபம் தந்தாலும் தங்கம் விலை இறங்கியபாடு இல்லை. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் வெறும் 5 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 595 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 40 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 77 ரூபாயாக விற்கப்பட்டது. கட்டிவெள்ளி விலையோ கிலோ 77ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் விலையுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி,சேதாரம் சேர்ந்தால்தான் முழுமையான தங்கம் விலை தெரிய வரும். செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதால் குறைவான செய்கூலி சேதாரம் எங்கு கிடைக்குமோ அந்த கடையை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம்,நீங்கள் நிச்சயம் புத்திசாலிகளாகத்தான் இருப்பீர்கள் விழித்திருங்கள், தங்கம் ஆபத்து நேரத்தில் உதவுவது போல் சிலநேரங்களில் மனிதர்கள் கூட உதவுவதில்லை.