விழுந்து சிதறிய இந்திய பங்குச்சந்தைகள்..
வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே இந்திய பங்குச்சந்தைகள் மிகப்பெரிய சரிவை கண்டன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 520புள்ளிகள் சரிந்தன.வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 59,910 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 121 புள்ளிகள் சரிந்து,17706 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் பெரிய சரிவை சந்தித்தன, இன்போசிஸ் நிறுவன பங்குகள் 15விழுக்காடு விழுந்ததே இந்திய பங்குச்சந்தைகளில் பாதிப்பு ஏற்பட காரணமாக கூறப்படுகிறது. Infosys, Tech Mahindra, HCL Technologies, NTPC ,Larsen and Toubro நிறுவன பங்குகள் பெரிய அளவில் சரிந்தன. Nestle India, Power Grid Corporation, SBI, Britannia உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன பொதுத்துறை வங்கிகள் பங்குகள் 3 % வரை ஏற்றம் கண்டன.
தங்கம் விலையில் பெரிய மாற்றமில்லாமல் தொடர்ந்தது. சர்வதேச அளவில் நிலவும் நிலையற்ற சூழல் காரணமாக தங்கத்தின் விலையில் ஒரு பெரிய மாற்றம் இல்லாத சூழல் காணப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 650 ரூபாய்க்கும், ஒரு சவரன் 45200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 81 ரூபாய் 60 காசுகளுக்கு விற்கப்படுகிறது. கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 100 ரூபாய் உயர்ந்து 81 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத்தங்கம் வாங்கும் போது மேலே கூறிய விலையுடன், 3% ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி, சேதாரம் கூடுதலாக சேர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.