சரிந்து முடிந்த சந்தைகள்…
வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 216 புள்ளிகள் சரிந்தன.வர்த்தக நேர முடிவில் 62,168 புள்ளிகளாக சந்தை இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 70 புள்ளிகள் சரிந்தன.18,755 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.1,667 பங்குகள் ஏற்றம் கண்டன.1989 பங்குகள் சரிந்தன. தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை விற்ற அதே விலையில் தொடர்கிறது. ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 545 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து 79 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து 79 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் தங்கத்துக்கு 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும்,செய்கூலி சேதாரம் சேர்க்க வேண்டும், ஆனால் செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனம் செலுத்த வேண்டும்.