சரிவில் முடிந்த சந்தைகள்..!!
இந்திய சந்தைகளில் வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் பெரிய சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 202 புள்ளிகள் சரிந்து 64,948 புள்ளிகளாக வர்த்தகக்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 55 புள்ளிகள் குறைந்து 19,310 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. உலகளவில் நிலவும் அசாதாரண சூழல்கள் காரணமாக பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி காணப்பட்டது. மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் தலா அரைவிழுக்காடு அளவுக்கு வீழ்ச்சி காணப்பட்டது.துவக்கத்தில் சரிவுடன் தொடங்கிய சந்தைகள் நாள் முழுவதும் ஊசலாட்டத்துடனே இருந்தன. கடைசி நேரத்தில் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதால் நிலைமை ஓரளவுக்கு சமாளிக்கமுடிந்தது. Hero MotoCorp, TCS, Coal India, Hindalco Industries,Tech Mahindra உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரியளவில் சரிந்தன.Adani Enterprises, Adani Ports, Eicher Motors, Maruti Suzuki,Nestle India உள்ளிட்ட நிறுவனங்கள் பெரிய லாபத்தை பதிவு செய்தன.ஆற்றல்துறை பங்குகள் மற்றும் FMCG பங்குகளைத்தவிர்த்து கிட்டத்தட்ட அனைத்து துறை பங்குகளும் சரிவில் முடிந்தன. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் ஒன்றரை விழுக்காடு சரிந்தன.D B Realty, CG Power and Industrial Solutions, Jyothy Labs, Patel Engineering, Venus Pipes, Dr. Reddy’s Laboratories, Bank Of Maharashtra, TV18 Broadcast, REC, Usha Martin, Minda Corporation, Escorts Kubota உள்ளிட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. தங்கம் விலையும் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 5455 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரனுக்கு 8 ரூபாய் மட்டும் குறைந்த தங்கம் 43,640 ரூபாயாக விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 76 ரூபாய் 70 காசுகளாக விற்பனையாகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து 76ஆயிரத்து 700 ரூபாயாக விற்கப்படுகிறது. இந்த விலகளுடன் 3விழுக்காடு ஜிஎஸ்டி, செய்கூலி,சேதாரம் கூடுதலாக சேர்க்கவேண்டும், ஆனால் செய்கூலி சேதாரம் ஒவ்வொரு கடைக்கும் மாறுபடும் என்பதால் சரியான தங்கம் விலை இங்கே குறிப்பிடப்படவில்லை. குறைந்த செய்கூலி, சேதாரம் உள்ள கடைகளை தேர்வுசெய்து தங்கம் வாங்குவது சிறந்தது.