ஏத்தரில் வருகிறது பேமிலி ஸ்கூட்டர்..
மின்சார ஸ்கூட்டர்களின் உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் நிறுவனங்களில் ஏத்தர் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் அடுத்தாண்டு தனது புதிய ஃபேமிலி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த இருக்கிறது.இதனை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தருண் மேத்தா உறுதி செய்திருக்கிறார். தற்போதுள்ள 450 சீரிஸ் பைக்குகளை விட அதிக இருக்கை இடங்கள் மற்றும் இன்னும் சவுகர்யமாக செல்லும் வகையில் புதிய ஸ்கூட்டர் தயாராகி வருகிறதாம். இந்தியாவில் பலதரப்பினரும் எளிதில் வாங்கி பயன்படுத்தும் வகையில் இந்த புதிய ஸ்கூட்டர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரக பைக்கின் டிசைனில் அந்நிறுவனம் தற்போது கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பலரும் வாங்கும் விலையில் அழகிய தோற்றத்தில் புதிய மின்சார ஸ்கூட்டர்கள் சந்தைக்கு வர இருப்பதாக மேத்தா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போது வரை ஏத்தர் நிறுவனத்தின் 450 ரக பைக்குகள் 450Sமற்றும் 450Xஆகிய பிரிவிகளில் சந்தையில் கிடைக்கின்றன.
1லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் விலை கொண்ட 450எக்ஸ் என்ற வகை பைக் ஒரு முறை சார்ஜ் போட்டால் 150 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் திறன் படைத்ததாக இருக்கிறது. 450sரக பைக்குகள் 1.30 லட்சம் ரூபாயாக விற்கப்படுகிறது. 450 ரக ஸ்கூட்டர்களுடன் , புதிய பேமிலி ஸ்கூட்டரையும் அந்நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. எக்ஸ் மற்றும் எஸ் வகை பைக்குகள் அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம் செல்லும் திறன் படைத்தவையாகும்.