தொடர விருப்பமில்லாத பிரபல கார்கள்!!!!
மாருதி ஆல்டோ 800 ரக கார்களின் உற்பத்தியை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் கார்கள் உற்பத்தி செய்வோரின் தரத்தை கன நேரத்தில் தெரிந்துகொள்ளும் RDE விதிகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் குறிப்பிட்ட சில கார் ரகங்களை உற்பத்தி நிறுத்தம் செய்ய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த பட்டியலில் நிசான் கிக்ஸ்,ஹோண்டா சிட்டி 4வது தலைமுறை உள்ளிட்ட முக்கியமான கார்களும் இடம்பிடித்துள்ளன. நிசான் கிக்ஸ் ரக கார்கள் இந்திய மதிப்பில் 9.49 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ளவையாகும். இதேபோல் இந்தியாவில் ஹோண்டா சிட்டி கார்கள் 5வது தலைமுறை கார்கள் அறிமுகமாகிவிட்டன. இந்த நிலையில் 4-ம் தலைமுறைகார்களை நிறுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதேபோல் HONDA WR-V ரக காரும்,மஹிந்திராவில் மராசோ, மஹிந்திரா கேயுவி 100 ஆகிய கார்களும் சந்தையில் பெரியளவுக்கு பிரபலமாகாத நிலையில் அந்த வகை மாடல்களை கைவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலே கூறிய கார்கள் எல்லாம் மிக வசதிபடைத்தவர்கள் மட்டுமே வாங்கும் வகையிலான கார்கள் என்ற நிலையில், நடுத்தர குடும்பத்தினரும் மாருதி 800 கார்கள் வைத்திருப்பார்கள், இந்த வகை காரில் ஆல்டோ 800 ரக கார்களை நிறுத்தவும், ரெனோவில் குவிட் ரக கார்களை உற்பத்தி நிறுத்தம் செய்யவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.