ஹல்திராம்ஸை வாங்கத்துடிக்கும் பிரபல நிறுவனம்..
ஸ்னாக்ஸ் விற்பனையில் இந்தியளவில் மிகப்பெரிய நிறுவனமாக திகழ்வது ஹல்திராம்ஸ், இந்த நிறுவனத்தில் பெரியளவு பங்குகளை வாங்க பிளாக்ஸ்டோன் நிறுவனம் முன்வந்துள்ளது. ஹல்திராம்ஸ் நிறுவனத்தின் 51 %பங்குகளை 40ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க இருப்பதாக பிளாக்ஸ்டோன் நிறுவன வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஹல்திராம்ஸ் குழுமத்தின் குடும்ப உறுப்பினர்கள் இடையே பேசி கடைகளை எப்படி நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்பட இருக்கிறது. EY என்ற நிறுவனம் பிளாக்ஸ்டோன் நிறுவனம் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிங்கப்பூர் ஜிஐசி மற்றும் அபுதாபி முதலீட்டு நிறுவனம் ஆகியவையும் ஹல்திராம்ஸை வாங்கும்பட்சத்தில் பெரிய பங்குகளை தங்கள் வசம் வைத்திருப்பார்கள். ஏற்கனவே கடந்த மே மாதத்தில் ஒரு தொகைக்கு பேச்சுவார்த்தை நடந்ததாகவும், இரண்டாவது முறையாக பேச்சுவார்த்தை தடங்கப்பட்டுள்ளதாகவும் பிளாக்ஸ்டோன் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால் ஹல்திராம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கிருஷன் குமார் சுடானி கருத்து தெரிவிக்க முறுத்துள்ளார். இன்னும் 6 அல்லது 8 வாரங்களில் ஹல்திராம்ஸை வாங்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று தகவல் கசிந்துள்ளது.