சாரி சொன்ன பிரபல கம்பெனி தலைவர்
கிரிடிட் சூய்சி என்ற மிகப்பெரிய நிதி நிறுவனம் அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலும் கிளைகளை வைத்திருந்தது. அங்கு நிதி முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து அந்த நிறுவன பங்குகள் ஒரே நாளில் 4-ல் ஒரு பங்காக சரிந்தது. இந்த சூழலில் அந்த நிறுவனத்தின் தலைவர் திவாலானதற்காக மன்னிப்பு கோரியுள்ளார். நிறுவனம் சரிந்துவிட்டபோதிலும் யூபீஎஸ் வங்கி,கிரிடிட் சூய்சியை வாங்கிவிட்டது. கிரிடிட் சூய்சி நிறுவனத்தின் தலைவராக இருந்த ஆக்சல் லேமன்,மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாமல் போனதற்காக மன்னிப்பு கோருவதாக கூறினார். திவாலாக வேண்டும் அல்லது யூபிஎஸ் வங்கியுடன் இணைய வேண்டும் எனற இரண்டு வாய்ப்புகள் மட்டுமே கிரிடிட் சூய்சி நிறுவனத்திடம் உள்ளது என்பதால் திவாலாக அந்நிறுவனம் விரும்பாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் சிலிக்கான் வேலி, சிக்னேச்சர் வங்கி ஆகியவை திவாலான அடுத்தடுத்த நாட்களிலேயே கிரிடிட் சூய்சி நிறுவனமும் சரிந்தது உலகளவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது.