2000 பைக்குகளை திரும்பப்பெறும் பிரபல நிறுவனம்!!!
CB300R என்ற பைக்கை ஹோண்டா நிறுவனம் அண்மையில் சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கின் இன்ஜினில் உள்ள கிரான்க் கேஸ் பகுதியில் உற்பத்தி பாதிப்பு இருப்பதாக புகார்கள் எழுந்தன. உடனே களத்தில் இறங்கிய ஹோண்டா நிறுவனம்,பாதிப்பு இருப்பதை உறுதி செய்தது. இதனையடுத்து குறிப்பிட்ட இந்த வகை பைக் வைத்திருக்கும் 2 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுத்துள்ளது. உற்பத்தியில் குறைபாடு இருப்பதை ஒப்புக்கொண்ட அந்த நிறுவனம் , உடனடியாக அதனை மாற்றித்தர ஹோண்டா விருப்பம் தெரிவித்துள்ளது.இன்ஜினில் ஏற்படும் அதீத சூடு மற்றும் எண்ணெய் கசிவை சரிசெய்ய ஹோண்டா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உற்பத்தியில் குறைபாடு இருப்பதால் எண்ணெய் கசிந்து தீப்பிடித்து எரிய அதிக வாய்ப்பும் இந்த வகை பைக்குகளில் உள்ளது.குறிப்பிட்ட இந்த மாடல் பைக் கடந்தாண்டுதான் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வரும் 15ம் தேதி முதல் குறிப்பிட்ட பாகங்களை பிக் விங் டீலர்களிடம் கொடுத்து குறிப்பிட்ட பாகத்தை மாற்ற ஹோண்டா நிறுவனம் ஏற்பாடுகள் செய்துள்ளது. இந்த பாகம் மாற்றுவதற்கு ஒரு பைசா கூட வாடிக்கையாளர்கள் செலவிட வேண்டாம் என்று ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஹோண்டா டீலர்களே தனது வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துவார்கள் என்றும் ஹோண்டா கூறியுள்ளது.