செபி லைசன்ஸ் பெறும் பிரபல நிறுவனம்!!!
ஒரு நாளில் 10 தொலைபேசி அழைப்பு வந்தால் அதில் இரண்டு லோன் வேண்டுமா என்று தான் வருகிறது என்று பலரும் புலம்புகின்றனர். இந்த கால்களில் ஏதேனும் ஒன்று பஜாஜ் பினான்ஸ் தொடர்பாக இருக்கிறது. இந்த நிலையில் தான் பஜாஜ் பின்சர்வ் நிறுவன அதிகாரிகள் பரஸ்பர நிதி சேவைக்கு விண்ணப்பித்திருந்தனர். இதற்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி அண்மையில் லைசன்ஸ் அளித்துள்ளது. தொழில்நுட்ப அடிப்படையில் நிதியை அளிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கணேஷ் மோகன் என்பவர் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் நிலையில், சஞ்சிவ் பஜாஜ் பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். இவர்களின் முயற்சியில் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் எனப்படும் பரஸ்பர நிதித்துறையில் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனம் களமிறங்க இருக்கிறது. பல்வேறு மருத்துவத்துறை,காப்பீடு,சொத்து நிர்வாகம் உள்ளிட்ட அம்சங்களுக்கு உதவும் வகையில் பஜாஜ் பினான்ஸ் கடன்களை அளித்து வருகிறது.