288 கோடி திருப்பி தரும் பிரபல மின்சார ஸ்கூட்டர் நிறுவனங்கள்!!!
இந்தியாவில் ஏத்தர், ஓலா,டிவிஎஸ், ஹீரோ ஆகிய நான்கு பெரிய நிறுவனங்களின் மின்சார ஸ்கூட்டர்கள்தான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்றன. குறிப்பிட்ட இந்த வகை பேட்டரி வாகனங்கள் வாடிக்கையாளர்களிடம் விற்கும்போது சார்ஜருக்கும் சேர்த்தே பில் போடப்பட்டது. ஆனால் சார்ஜருக்கு பில் போடக்கூடாது என்றும் அதற்குபில் போட்டிருந்தால் அதனை திரும்ப அளிக்க வேண்டும் என்றும் FAME என்ற அமைப்பின் விதி உள்ளது. இதனை இந்த 4 நிறுவனங்களும் மீறிவிட்டதாகக் கூறி ஆதாரங்களுடன் புகார்கள் குவிந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய கனரக ஆலை அமைச்சக அதிகாரிகள் குறிப்பிட்ட இந்த நிறுவனங்களுக்கு அளித்து வரும் மானியத்தை நிறுத்துவதாக எச்சரிக்கை விடுத்தது.
இதனால் அதிர்ந்து போன இந்த 4 நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பதாக அறிவித்துள்ளனர். இதில் ஏத்தர் நிறுவனம் 95 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு 140 கோடி ரூபாய் திரும்ப அளிக்கவும்,ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 1லட்சம் வாடிக்கையாளர்களுக்கு 130 கோடி ரூபாயும்,87ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு 15கோடி ரூபாயை டிவிஎஸ் நிறுவனமும்,ஆயிரத்து 100 வாடிக்கையாளர்களுக்கு 2.2கோடி ரூபாய் நிதியைும் திரும்ப அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளன. முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு பணம் திரும்ப தந்துவிட்டோம் என்பதை உறுதிசெய்தபிறகே மானியத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று FAME நிறுவனம் கண்டிப்புடன் சொல்லிவிட்டதால் வேறு வழியின்றி அதற்கான பணிகளை இந்த நிறுவனங்கள் செய்து வருகின்றன அரசாங்கத்திடம் இருந்து எவ்வளவு மானியம் பெற முடியுமோ அத்தனை சாத்தியங்களையும் இந்த 4 நிறுவனங்களும் செய்து வருகின்றன. வாகன விற்பனை விலையை குறைத்தால்தான் இன்னும் கூடுதல் மானியம் தருவோம் என்று மத்திய அரசு கூறியதும் மறுப்பு ஏதும் சொல்லாமல் அப்படியே ஆகட்டும் என்று ஓலாவும்,ஏத்தரும் விற்பனை விலையை குறைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடப்பாவிங்களா புகார் வரலன்னா ஏமாந்து தான் போயிருப்போம் என்று சிலர் தற்போது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.