அப்பாடா… இப்போ தான் நிம்மதியா இருக்கு!!!!
அமெரிக்காவில் நிலவும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு மத்திய பெடரல் ரிசர்வ் தடுமாறி வருகிறது. அதற்காக அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்துவது. இது அவர்களுக்கே பாதகமாக முடிவுற்றது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் நேற்று மார்ச் 22ம் தேதி கடன்கள் மீதான வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியது. இது பற்றி பெடரல் ரிசர்வ்வின் தலைவராக உள்ள ஜெரோம் பாவெல் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் பொருளாதார மந்த நிலை அமெரிக்காவில் நிச்சயம் இருக்கும் என்றும் இதன் விளைவாக விரைவில் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் அறிவிப்பு காரணமாக அமெரிக்க பங்குச்சந்தைகள் 0.9 விழுக்காடு உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், ஜெரோம் பாவெல் தனது பேச்சின் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்தியதாக அந்நாட்டு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க பெடரல் ரிசர்வின் முடிவால் அமெரிக்க தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் சரிவை கண்டன. அமெரிக்க சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டதால் ஆசிய சந்தைகளும் சற்றே ஏற்றமடைந்துள்ளன