LIC – IPO வுக்காக அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் திருத்தம் !
இந்த காலாண்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) மெகா பொது வெளியீட்டை எளிதாக்கும் வகையில், அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் அரசாங்கம் திருத்தம் செய்ய உள்ளது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் செயலர் அனுராக் ஜெயின் (DPIIT), தற்போதைய கொள்கை எல்ஐசியின் முதலீட்டு செயல்முறையை எளிதாக்காது, எனவே, திருத்தப்பட வேண்டும் என்று கூறினார் இந்த விவகாரம் நிதி சேவைகள் துறை (DFS) மற்றும் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை (Dipam) ஆகியவற்றுடன் விவாதிக்கப்படுகிறது.
மாத இறுதிக்குள் எளிமையாக்கப்படக்கூடிய அல்லது விநியோகிக்கப்படக்கூடிய சட்டங்கள் மற்றும் விதிகளை அடையாளம் காணுமாறு அரசாங்கத் துறைகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் மற்றும் இணக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மார்ச் இறுதிக்குள் நடபெறலாம் என்று கூறிய அவர், மீதமுள்ளவை ஆகஸ்ட் 15 க்குள் நடைபெறலாம் எனக் கூறினார். ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு மேலும் கூடுதல் வசதிகளை வழங்க அரசாங்கம் முயன்று வருவதாகவும் இதுவரை, அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 60,000 ஸ்டார்ட்அப்கள் சுமார் 6.5 லட்சம் வேலைகளை உருவாக்கியுள்ளன என்றும் ஜெயின் கூறினார்.