ஃபெட் வட்டி விகிதம் உயராதாம்..
அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது இரண்டு நாள் கூட்டத்தை அடுத்த வாரம் நடத்த உள்ளது. அமெரிக்க பணவீக்கம் 2 %க்கு மேல் இருக்கக் கூடாது என்பதற்காக பெடரல் ரிசர்வ் பல்வேறு வழிகளை செய்து வருகிறது. எனினும் அமெரிக்க பணவீக்கம் குறையவில்லை என்று அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பாவல் தெரிவித்துள்ளார். விலைவாசியை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடந்தாண்டு முதல் 11 முறை வட்டி விகிதங்களை உயர்த்தியிருக்கிறது. 1980ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த அளவு குறுகிய காலகட்டத்தில் அமெரிக்கா தனது கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதே இல்லை என்கிறது புள்ளி விவரம். அமெரிக்காவில் கிரிடிட் கார்டுகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 20%ஆக உள்ளது. அடகு வைத்து கடன் வாங்குவோரின் எண்ணிக்கை 8%ஆக உயர்ந்திருக்கிறது. வங்கிகளில் கடன் வாங்கி படிக்கும் மாணவர்களின் விகிதம் 5.5% ஆகவும், டெபாசிட் செய்வோரின் விகிதம் 5%ஆகவும் உள்ளது. இதே நேரம் ஆட்டோமொபைல் கடன் விகிதம் 7%ஆக இருக்கிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகிதம் குறைந்தாலும்,மக்களுக்கு நேரடியாக எந்த பெரிய பலனும் கிடைக்கப்போவதில்லை என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.