FEDERAL Bank-ன் நிகர லாபம் 522 கோடியாக உயர்வு..!!
தனியார் துறை வங்கியான ஃபெடரல் வங்கி, கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில், நிகர லாபம்ஆண்டுக்கு ஆண்டு 29 சதவீதம் உயர்ந்து ரூ.522 கோடியாக உள்ளது.
ஃபெடரல் வங்கியின் நிகரலாபம், வருமானம் அதிகரிப்பு:
FY21 இன் மூன்றாவது காலாண்டில், நிகர லாபம் 404 கோடியாக இருந்தது. தொடர்ச்சியாக, செப்டம்பர் 2021 உடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிகர லாபம் ரூ.460 கோடியிலிருந்து 13.2 சதவீதம் உயர்ந்துள்ளது. செவ்வாயன்று பிஎஸ்இயில் அதன் பங்கு 4.35 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை ரூ.95.85- ஆக இருந்தது. காலாண்டின் மற்ற வருமானம் ஓராண்டில் ரூ.475 கோடியிலிருந்து ரூ.484 கோடியாக உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக, செப்டம்பர் 2021 உடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.491 கோடியிலிருந்து குறைந்துள்ளது.
21-ஆம் நிதியாண்டின் இதேகாலாண்டில் ரூ.1.28 கோடியாக இருந்த அதன் முன்பணங்கள் 12 சதவீதம் (YoY) அதிகரித்து, Q3ல் ரூ.1.43 டிரில்லியனாக உயர்ந்துள்ளது.
பெடரல் வங்கியின் சில்லறை கடன் ஆண்டுக்கு எட்டு சதவீதம் மற்றும் வணிக வங்கி கடன் 11 சதவீதம் உயர்ந்துள்ளது. தங்கக் கடனைப் பொறுத்தவரை, டிசம்பர் 2021ல் தங்கக் கடன்கள் 11.5 சதவீதம் அதிகரித்து ரூ.16,378 கோடியாக இருந்தது.
ஃபெடரல் வங்கி அறிக்கை தாக்கல்:
மும்பை பங்குச் சந்தையில், ஃபெடரல் வங்கி தாக்கல் செய்துள்ள தகவலின்படி, 2020 டிசம்பரில் 2.71 சதவீதமாக இருந்த மொத்த செயல்படாத சொத்துக்கள் (NPAs) 2021 டிசம்பரில் 3.06 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், செப்டம்பர் 2021 இல் இது 3.24 சதவீதத்திலிருந்து குறைந்தது. 2021 டிசம்பரில் அதன் மூலதனப் போதுமான அளவு 14.37 சதவீதமாக இருந்தது.