பண்டிகை வந்தாச்சி..!! பொருட்கள் விற்பனை அமோகம்…!!
இந்திய பொருளாதாரத்தில் பண்டிகைகளின் பங்கும் மிகமுக்கியம் என்றால் அது மிகையல்ல.இந்தியாவில் பண்டிகைகள் வந்தால் அதை குறிவைத்து ஒரு பெரிய வணிகம் நடைபெறும்.முதல் 6.7 மாதங்கள் பெரிய அளவில் இந்த பண்டிகை கொண்டாட்டங்கள் இருப்பதில்லை , ஆகஸ்ட் வந்தால் போதும் பண்டிகைகள் வரிசைகட்டுகின்றன. சுதந்திர தின கொண்டாட்டத்தைத் தொடர்ந்து ஓணம்,ரக்ஷா பந்தன் என்று வரிசையாக பண்டிகைகள் வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் இருந்த மந்த நிலை தற்போது மெல்ல குறைந்து மீண்டும் மக்கள் கடைகளுக்கு படையெடுக்கத் தொடங்கியிருப்பதாக வணிக அமைப்புகள் தெரிவிக்கின்றன.விலைவாசி உயர்வு ஒருபக்கம் இருந்தாலும் மக்களின் வாங்கும் திறனும் அதிகரித்துள்ளது நல்ல விஷயம் என்று வணிகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்தாண்டு நவம்பர்,டிசம்பர் வரை இருந்த சூழலை விட தற்போது 80 முதல் 90 விழுக்காடு வரையிலான வியாபாரம் அதிகரித்துள்ளதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தாண்டு தொடக்கத்தில் பணவீக்கம் அதிகளவில் இருந்ததால் அது வணிகத்தை பாதித்ததாகவும்,தற்போது அந்த சூழல் சற்று குறைந்திருப்பதாகவும் வணிகர்கள் தெரிவிக்கின்றனர். வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மின்விசிறி போன்ற பொருட்கள் அதிகளவில் விற்கப்படுவதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.