வங்கி அதிகாரிகளை சந்திக்கும் நிதி அமைச்சர்…
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வாரத்தில் பொதுத்துறை வங்கி நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசுத்துறை வங்கிகளின் நிலை மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறியும் நிர்மலா சீதாராமன், வாராக்கடன்கள் குறித்து ஆலோசிப்பார் என்று வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் பொதுத்துறை வங்கிகளின் தலைமை பதவிகளில் இருப்போரிடம் திவால் நிறுவனங்கள் மற்றும் அது சார்ந்த 20 டாப் நிறுவன பட்டியல் மற்றும் தரவுகளை நிதியமைச்சகம் கேட்டிருந்தது. இது தொடர்பான ஆலோசனைகளிலும் மத்திய அமைச்சர் ஈடுபட்டிருந்தார்.NeSL என்ற நிறுவனத்தின் மூலம் கடன்கள் மற்றும் அது சார்ந்த வரலாற்று தரவுகளை பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. திவால் நிறுவனங்கள் தொடர்பான தரவுகளை தீர்க்க இந்த NEsl தரவுகள் உதவ இருக்கின்றன. இது தொடர்பாக அண்மையில் நடந்த கூட்டத்தில் கார்பரேட் விவகாரங்கள் துறை செயலர் மனோஜ் கோவில் மற்றும் திவால் நிறுவனங்கள் சார்ந்த விவகாரங்கள் துறை தலைவர் ரவி மிட்டல் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர். இதனிடையே தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனமான NARCLநிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க நிதித்துறை செயலர் விவேக் ஜோஷி திட்டமிட்டுள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்து மத்திய அரசு தயார் நிலையை ஆய்வு செய்தது. குறிப்பாக ஜன்தன் கணக்குகள், ஜீவன் ஜோதி பிமா யோஜ்னா, அடல் பென்ஷன் உள்ளிட்ட திட்டங்கள் சார்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் வங்கிக்கணக்கு இல்லாத 18 வயது நிரம்பியவர்கள் மீது கவனம் செலுத்தி, கடன் மற்றும் மாவட்ட அளவிலான கடன் பட்டியல் தயாரித்து, அதில் கடன் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் மத்திய அரசாங்கம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.