புத்தாண்டு முதல் உயர்வு!!!
Floating rate சேவிங்க்ஸ் பாண்ட் என்ற பத்திரத்தை ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதன் வட்டி விகிதம் வரும் 1-ம் தேதியில் இருந்து உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி தற்போது இந்த வகை பத்திரங்களின் வட்டி விகிதம் 7 புள்ளி 15%-ல் இருந்து 7.35% ஆக உயர்கிறது. இந்த வட்டி விகிதம் வரும் ஜூன் மாதம் வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பத்திரத்தில் யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?
*இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் இந்த பத்திரத்தை வாங்கிக்கொள்ள முடியும்.
*துவக்க விலை ஆயிரம் ரூபாயில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் இதனை வாங்கிக்கொள்ள முடியும்.
7 ஆண்டுகள் வரை இந்த பத்திரத்தில் சேமிக்கலாம், பாதியிலேயே விரும்பி வெளியேறும் வசதியும் உள்ளது. ஆனால் முழு தொகையும் கிடைக்காது. ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஜனவரி 1 மற்றும் ஜூலை 1ம் தேதிகளில் இந்த பத்திரங்கள் மீதான வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும்.