40 ஆண்டுகளில் முதல் முறையாக நடந்த போராட்டம்!!!!
உலகளவில் மிகவும் நம்பகமான, தகவல்களை முந்தி தருவதில் நியுயார்க் டைம்ஸ் நிறுவனம் மிகவும் பிரபலமானதாகும், இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உரிய பணி பாதுகாப்பு, வேலைக்கு ஏற்ற ஊதியம் வேண்டும் என்று பல முறை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் உரிய ஊதியம், காப்பீடு உள்ளிட்டவற்றை தராவிட்டால் பணியை செய்யமாட்டோம் என அந்நிறுவன ஊழியர்கள் ஆயிரத்து 100 பேர் பணி புறக்கணப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது 40 ஆண்டுகளில் நடக்காத நிகழ்வாகும், பிரேக்கிங் நியூசை முந்தித்தரும் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்களுக்கு செய்தி சென்று சேர்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. உரிய சம்பளம் தராவிட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தவும் நியுயார்க் டைம்ஸ் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.