வால்மார்ட்டுக்கு கைகொடுத்த ஃபிளிப்கார்ட்..

வால்மார்ட் நிறுவனத்தின் ஒரு பகுதியாக பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டே எனப்படும் வணிக சிறப்பு விற்பனை நாளை அறிமுகப்படுத்தியது. இது இந்திய அளவில் நல்ல முன்னேற்றத்தை தந்தது. இது மட்டுமின்றி அமெரிக்காவில் இருந்து இயங்கும் வால்மார்ட் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் குறிப்பிடத்தகுந்த ( 32புள்ளிகள்) முன்னேற்றத்தை தருவதாக புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. உலகளவில் விற்பனை வெகு மந்தமாக இருந்த அதே நேரம் இந்தியாவில் ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டே கைகொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி மின் வணிக சந்தை அமோகமாக வளர்ந்து வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவிலும் விற்பனை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நிபுணர்கள் கணிப்பைப்போலவே ஏற்ற இறக்கம் நிலவினாலும், அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் லாபம் மட்டுமே 453 மில்லியன் அமெரிக்க டாலர்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. உலகளவில் மின்வணிக நிறுவனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும்,விற்பனையும் 15%அதிகரித்திருக்கிறது. ஒரு ஆண்டு விற்பனை கடந்தாண்டை விட 5முதல் 5.5விழுக்காடு வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.