மருத்துவத்துறையில் Flipkart..Flipkart Health+ செயலி அறிமுகம்..!!
மருந்துகளை விற்பனை செய்வதற்காக Flipkart நிறுவனம் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் E-Commerce தளத்தில் வேகமான வளர்ந்து வரும் ஃப்ளிர்கார்ட் நிறுவனம் தனது வர்த்தகத்தை மேலும் விரிவுப்டுத்தும் விதமாக தற்போது, மருத்துவத் துறையிலும் கால் பதித்துள்ளது.
மருந்துகளை விற்பனை செய்வதற்காக ஃப்ளிப்கார்ட் ஹெல்த் + என்ற புதிய செயலியை Flipkart அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Flipkart Health+ செயலி மூலம் அனைத்து மருந்துகளையும், மருத்துவம் சார்ந்த பொருட்களையும் பெற முடியும். அது மட்டுமில்லாமல் சுகாதாரப் பாதுகாப்பு(HealthCare) பொருட்களான ஊட்டச்சத்து பானங்கள்(Health Drinks) உள்ளிட்ட ஆரோக்கியம் தொடர்பான அனைத்துப் பொருட்களையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற முடியும் என்று ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Flipkart Health+ செயலி முதற்கட்டமாக ஆன்ட்ராய்ட் செல்ஃபோன்களில் பயன்படுத்த வசதியாக கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகமாகியுள்ளது.
அடுத்த சில நாட்களில் ஆப்பிள் வகை செல்ஃபோன்களில் பயன்படுத்த வசதியாக ஆப் ஸ்டோரில் அறிமுகம் செய்யப்படும் என்றும், இதேபோல், இணையதளம் மூலமாகவும் மருந்துப் பொருட்களை வாங்கலாம் எனவும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த செயலியில் சிறப்பம்சமாக மருத்துவர்களின் முக்கியக் கட்டுரைகளும் உள்ளது. இந்தியாவில் 20 ஆயிரம் பின்கோடுகளுக்கு ஃப்ளிப்கார்ட் ஹெல்த் + செயலியின் சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த துறையில் பல முன்னணி நிறுவனங்கள் சேவையை வழங்கி வருகின்றன. சில சிறு நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து செயல்பட்டு வருகின்றன. ஃப்ளிப்கார்ட்டின் இந்த மருத்துவ செயலி, ஏற்கனவே சந்தையில் உள்ள Tata 1mg, Reliance Industries Netmeds, Amazon PharmEasy ஆகிய ஆன்லைன் வணிக நிறுவனங்களுடன் போட்டியிட களமிறங்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.