அமெரிக்க சந்தையில் இடம்பெற திட்டம்.. IPO வெளியிடும் Flipkart..!!
E-Commerce நிறுவனமான Flipkart 2023-ம் ஆண்டில் அமெரிக்க பங்குச் சந்தையில் இடம்பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட Flipkart , இந்தியாவில் E-Commerce தளத்தில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமா உள்ளது. இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை மேலும் விரிவுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதன்ஒரு பகுதியாக, 2023-ம் அமெரிக்காவின் பங்குச் சந்தையான நாஸ்டாக்கில்(Nasdaq)பட்டியலிடப்படவும், இதற்காக 60 முதல் சுமார் 70 பில்லியன் டாலர் ஐபிஓ வெளியிட திட்டமிட்டுள்ளது.
ஃப்ளிப்கார்ட் நிறுவனம், கடந்த ஆண்டு, Clear Trip என்ற போக்குவரத்து தொடர்பான நிறுவனத்தை வாங்கியது. அண்மையில் Flipkart Health + என்ற மருத்துவம் தொடர்பான செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரணங்களால் Flipkart-ன் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே, அமெரிக்காவை சேர்ந்த Wallmart குழுமம், ஃப்ளிப்கார்ட்டின் 77% பங்குகளை வாங்கியுள்ளது. கடந்த ஆண்டில் 3.6 பில்லியன் டாலர் திரட்டிய ஃப்ளிப்கார்ட்டின் சந்தை மதிப்பு37.6 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது, இந்திய நிறுவனம் அமெரிக்க பங்குச் சந்தையில் ஐபிஓ வெளியிட திட்மிட்டிருப்பதால் அதன், பங்குச் சந்தை மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.