பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு.!!!
இந்தியாவில் பல திரைப்படங்களிலும் இடம்பிடித்துள்ள ராயல் என்ஃபீல்டு பைக் நிறுவனம் அடுத்ததாக நேபாளம் மற்றும் வங்கதேசத்துக்கும் விரிவடைய இருக்கிறது. அந்த நிறுவனத்தின் பைக்குகள் உலகளவில் தனது கிளைகளை விரிவுபடுத்த இருக்கிறது. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து அசம்பிள் மற்றும் உற்பத்தி ஆலைகள் பக்கத்து நாடுகளில் செய்யப்பட இருப்பதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார். இப்போது வரை 40 நாடுகளில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இயங்கி வருகிறது. 250 முதல் 750 சிசி வரையிலான பைக்குகள் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி 10விழுக்காடாக உயர்ந்துள்ளது J-சீரிஸ் ரக பைக்குகளில் மீட்டியார்,ஹண்டர் ரக மாடல்கள் அமோக வரவேற்பு பெற்றுள்ளதுடன் சந்தை மதிப்புகளையும் உயர்த்தியுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் நிறுவனத்தின் வளர்ச்சி 20-25 விழுக்காடு வளர்ந்துள்ளதாகவும் கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து உற்பத்தியானது மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்டவை என 8லட்சத்து34ஆயிரத்து895 பைக்குகள் கடந்த ஓராண்டில் விற்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அர்ஜெண்டினா,கொலம்பியா,தாய்லாந்து மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உற்பத்தி பிரிவுகள் உள்ளன.
இந்தாண்டு அல்லது அடுத்தாண்டுக்குள் நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் ஒருங்கிணைப்பு தொழிற்சாலை அமையும் என்றும் கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.