இந்தியாவில் கோடிகளில் கொட்டிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
இந்தியாவில் கடந்த 15 நாட்களில் மட்டும் வெளிநாட்டுமுதலீட்டாளர்கள் சுமார் 23 ஆயிர்த்து 152 கோடி ரூபாயை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலிடுகளை செய்துள்ளனர். அமெரிக்காவில் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தாமல் சற்று காலம் நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் வெறும் 7ஆயிரத்து936 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதேபோல் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 11,630 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் பெறப்பட்டன. இந்த சூழலில் இந்த எண்ணிகை மே மாதத்தின் முதல் பாதியிலேயே கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை உயர்வுக்கு அதானி குழுமம் ஒரு காரணியாக கூறப்படுகிறது. ரூபாயின் மதிப்பு வலுவடைந்து டாலர் சரியும்போது இந்த வகையில் முதலீட்டாளர்கள் தங்கத்ததுக்கும் மாற்றாக பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது உண்டு, அப்படித்தான் இந்த முதலீடுகளும் ௐன்று சேர்க்கப்பட்டுள்ளன. இந்தாண்டின் முதல் இரண்டு மாதங்களில் சுமார் 34 ஆயிரம் கோடி ரூபாய் வரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை எடுத்துச்சென்றுவிட்டனர். இதனால் பங்குச்சந்தைகளில் சரிவு காணப்பட்டது. அமெரிக்காவில் வங்கிகள் திவாலான நேரத்தில் அமெரிக்க வங்கிகளை பாதுகாக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனஸ்ரீ இதன் விளைவாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இந்திய பங்குச்சந்தைகள் பக்கம் திருப்பியுள்ளனர். மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் 68 கோடி ரூபாயை டெப்ட் மார்க்கெட்டிங்க என்ற வகையில் இந்த முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். நிதித்துறை பங்குகளில்தான் அதிகம்பேர் தங்கள் பணத்தை முதலீடு செய்திருக்கின்றனர் என்கிறது புள்ளிவிவரம்.