செமிகண்டக்டர் சிப்களை உருவாக்க பாக்ஸ்கான் தலைவர் இந்தியா வருகை
பாக்ஸ்கான் தலைவர் யங் லியு, வியாழன் அன்று பிரதமர் நரேந்திர மோடி, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரை சந்தித்தார்.
அத்துடன் ஃபாக்ஸ்கான் இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்காக வேதாந்தா குழுமத்தின் குறைக்கடத்தி வணிகத்திற்கான உலகளாவிய நிர்வாக இயக்குநரான ஆகர்ஷ் ஹெப்பாரையும் லியு சந்தித்தார்.
வேதாந்தா குழுமம் இந்தியாவில் டிஸ்ப்ளே மற்றும் செமிகண்டக்டர் சிப்களை உருவாக்க 5-10 ஆண்டுகளில் $15 பில்லியன் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
தைவானைத் தலைமையிடமாகக் கொண்ட ஃபாக்ஸ்கான் உலகின் மிகப்பெரிய ஒப்பந்த உற்பத்தியாளர் ஆகும். இது ஆப்பிள், சியோமி மற்றும் எச்எம்டிக்கு ஸ்மார்ட்போன்கள், ஈதர் எனர்ஜி மற்றும் ஓலா எலக்ட்ரிக்குக்கான EV பாகங்கள், Vu க்கான தொலைக்காட்சிகள், டெலிகாம் மற்றும் இந்தியாவில் ZTEக்கான நெட்வொர்க்கிங் தயாரிப்புகளை அதன் மூன்று உற்பத்தி மூலம் தயாரிக்கிறது.