முதலீட்டாளர்களுக்குத் திருப்பியளிக்க 1981 கோடி தயார் – “பிராங்க்ளின் டெம்பிள்டன்” அறிவிப்பு
“பிராங்க்ளின் டெம்பிள்டன்” நிறுவனத்தின் பரஸ்பர நிதித் திட்டத்தின் கீழ் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட ஆறு கடன் திட்டங்களில் பரஸ்பர நிதி அலகுகள் வைத்திருந்தவர்களுக்கு 1981.02 கோடி பணம் திருப்பியளிக்கத் தயார் நிலையில் இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது, ஏற்கனவே இந்த 6 திட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்பு, 23 ஏப்ரல் 2020-ல் முதலீட்டாளர்களுக்கு சந்தை மதிப்பின் தங்கள் மேலாண்மையின் கீழ் வைத்திருந்த வாடிக்கையாளரின் முதலீட்டில் (AUM) 84% தொகையான ₹21,080.34 திருப்பி அளிக்கப்பட்டது.
உபரியாக நிறுவனத்திடம் இருக்கும் பணமானது இன்னும் சில நாட்களில் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்று நிறுவன வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. பெருந்தொற்று காரணமாக கடன் சந்தையில் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் இந்த நிறுவனத்தின் 6 திட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. இந்த ஆண்டின் பிப்ரவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் மட்டும் “பிராங்க்ளின் டெம்பிள்டன்” இந்த பரஸ்பர நிதி முதலீட்டாளர்களுக்கு 5 பகுதிகளாக 21,080.34 கோடி ரூபாயை திருப்பி அளித்திருக்கிறது.
முதலீட்டு மேலாண்மை மற்றும் ஆலோசனைக் கட்டணமாக நிறுவனம் வசூலித்த 512 கோடி பணத்தை முதலீட்டாளர்களிடம் திருப்பி அளிக்குமாறு கடந்த ஜூன் 7 ஆம் தேதி செபி (SEBI) “பிராங்க்ளின் டெம்பிள்டன்” நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது. ஏப்ரல் 2020 இல் மூடப்பட்ட 6 கடன் திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பாகக் கூறி இந்த நிறுவனத்திற்கு 5 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் நிறுவனத்துக்கு ஆறுதல் தரும் விதமாக பிணைகளுக்கான மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (Securities Appellate Tribunal) செபியின் உத்தரவில் சிலவற்றை நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக முதலீட்டாளர்களுக்கு தங்களது பணம் திரும்ப பெறும் சூழல் உருவாகியுள்ளது.