வேலை வாங்கி தருவதவாக மோசடி கண்டுபிடிப்பு..
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக டிசிஎஸ் உள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் டிசிஎஸ் நிறுவனத்தில் சில மூத்த அதிகாரிகள் சிக்கியுள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்டு சில ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கு பணிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 100 கோடி ரூபாய்க்கும் மேல், பல ஆண்டுகளாக லஞ்சம் கைமாறியதாக கூறப்பட்டத்தை அடுத்து 4 முக்கிய நிர்வாகிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 4 மூத்த நிர்வாகிகள் மற்றும் 3 நிறுவனங்களை டிசிஎஸ் நிறுவனம் தடை விதித்துள்ளது. இதில் பிரதானமாக Tcs நிறுவனத்தில் RMG பிரிவின் தலைவரான சக்கரவர்த்தி மீது புகார்கள் டிசிஎஸ் சிஇஓக்கு சென்றன. புகாரை விசாரிக்க 3 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டது. குழுவின் விசாரணையில் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதையடுத்து சக்கரவர்த்தி மற்றும் அருண் ஆகிய முக்கிய பொறுப்பில் இருந்த இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 3 லட்சம் பேரை புதிதாக டிசிஎஸில் சேர்த்துள்ள நிலையில் 100 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் கைமாறியிருப்பது தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கீர்த்தி வாசன் பதவியேற்ற சில நாட்களில் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.